சபரிமலை...பிரசாதத்தை பிராமணர்கள் மட்டும்தான் தயாரிக்க வேண்டுமா? தேவஸ்தானம் அதிரடி!

Kerala Festival
By Sumathi Aug 10, 2022 05:11 AM GMT
Report

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிராமணர்கள் மட்டுமே பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விலக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பிரசாதம் 

கேரளா, சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு பூஜை நிகழ்வையொட்டி, ஐயப்பன் கோவிலுக்கு உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

சபரிமலை...பிரசாதத்தை பிராமணர்கள் மட்டும்தான் தயாரிக்க வேண்டுமா? தேவஸ்தானம் அதிரடி! | Non Brahmins Too Can Prepare Sabarimala Prasadam

இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நேற்று தேவசம் போர்டு கொடுத்துள்ள விளம்பரத்தில் இந்த ஜாதி நிபந்தனை தவிர்க்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானம் அதிரடி  

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலையாள பிராமணர்கள் மட்டுமே நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விலக்கி தேவசம் போர்டு விளம்பரம் வெளியிட்டுள்ளது.

சபரிமலை...பிரசாதத்தை பிராமணர்கள் மட்டும்தான் தயாரிக்க வேண்டுமா? தேவஸ்தானம் அதிரடி! | Non Brahmins Too Can Prepare Sabarimala Prasadam

2001ஆம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை. தற்போது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவந்த சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினர் பாரட்டி வரவேற்றுள்ளனர்.