ஆல்கஹால் இல்லாத வைன் உடலுக்கு நல்லதா? பலர் அறியாத தகவல்
மது அல்லாத வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன.
வைன்
சமீபத்திய ஆய்வில், மது நுகர்வோரில் 15 முதல் 20% பேர் மது அல்லாத பானங்களை வாங்குவதில் கூடுதல் சுகாதாரப் பலன்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

ஆல்கஹாலில் கலோரிகள் உள்ளன, எனவே மதுபானத்தோடு ஒப்பிடுகையில் மது அல்லாத பானங்களில் குறைந்த அளவிலே கலோரிகள் உள்ளன. எந்த வகை பானம் என்பதைப் பொருத்து சர்க்கரை நிறைந்ததாகவும் உள்ளன.
உடலுக்கு நல்லதா?
அவற்றை கூடுதலாக எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதிகப்படியான திரவம், சர்க்கரை மற்றும் அசிடிக் பானங்களால் பல் எனாமல்களில் பாதிப்பு ஏற்படலாம். ரெட் வைன் போன்ற ஆல்கஹால் குறைக்கப்பட்ட பானங்கள்
இதய நோய் ஆபத்து போன்ற பிரச்னைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் ஆல்கஹால் அல்லாத' பானம் எனக் குறிப்பிடப்படும் பானங்களில் 0.5% வரை ஆல்கஹால் இருக்கலாம்.
அதே வேளையில் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட பானங்களில் 1.2% வரை ஆல்கஹால் இருக்கலாம்.