தோனியை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க; வீரர்களிடம் அத செய்வாரு - அம்பத்தி ராயுடு பளீச்!

Jiyath
in கிரிக்கெட்Report this article
முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
அம்பத்தி ராயுடு
இந்திய அணியில் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமானவர் 'அம்பத்தி ராயுடு'. இதுவரை 55 போட்டிகளில் விளையாடிய அவர் 47 சராசரி வைத்துள்ளார். தனது பேட்டிங் மூலம், சுழற்பந்து, வேகப்பந்து என அனைத்தையும் அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடுவார்.
மேலும், ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து தமிழக ரசிகர்களின் மனதை வென்றார். இதனையடுத்து, கடந்த மே மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் அவர், தனது ஓய்வினை அறிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து அம்பத்தி ராயுடு நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது "வீரர்களிடம் இருக்கும் சிறந்த திறமையை தோனி வெளிக்கொணர்வார் என்பதை அனைவரும் அறிவார்கள்.
பேட்டி
சென்னை அணியில் விளையாடிய சில வெளிநாட்டு வீரர்களின் திறமையைக் கூட தோனி சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்தப் பண்பு அவரிடம் இயற்கையாகவே இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவருக்கு தெரியாது.
ஒருவேளை அவர் அந்த திறமையை ஆசீர்வாதமாக பெற்றிருக்கலாம். பெரும்பாலான தருணங்களில் நான் நினைக்காதவற்றை எப்படி அவர் செய்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன்.
ஒவ்வொரு நாளின் இறுதியிலும் 99.99 சதவீத தருணங்களில் அவர் சரியான முடிவுகளையே எடுத்திருப்பார். அதை அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செய்து வருகிறார். அதனால் இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கும் நபராலும் அவருடைய முடிவுகளை கேள்வி கேட்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.