ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு - டுவிட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக டுவிட்டரில் பதிவிட்ட நிலையில் அந்த பதிவை உடனடியாக நீக்கினார்.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றையின் லீக் போட்டியில் பெங்களூரூ அணியை பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் பெங்களூரூ அணியின் வீரர் விராட் கோலி 6,500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
முன்னதாக 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.ரன் குவிக்க முடியாததால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். இந்த புகைப்படங்கள் சமூக வளைத்தலங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு நடப்பு ஐபிஎல் தொடர் தான் தனக்கு கடைசி,
ஐபிஎல் தொடர் என்றும் 13 ஆண்டுகள் சென்னை,மும்பை இருபெரும் அணிகளுக்காக விளையாடியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து சிறிது நிமிடங்களிலே ராயுடு அந்த பதிவை நீக்கினார்.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் ஒரு சில போட்டியில் சரியாக விளையாட விரக்தியில் அவ்வாறு பதிவிட்டு இருக்கலாம் என்றும்,நிச்சயம் அவர் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெறவில்லை என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

வரலாற்றில் முதல்முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர்! தமிழர்களுடன் இணைந்த சிங்கள மக்கள் IBC Tamil

தலைமறைவாகியிருந்த மகிந்த இன்று நாடாளுமன்றம் சென்றார்! சூடு பிடிக்கும் நாடாளுமன்ற விவாதங்கள் IBC Tamil
