இலக்கியத்திற்கான நோபல் பரிசு - தட்டிச் சென்ற பிரான்ஸ் எழுத்தாளர்!

France
By Sumathi Oct 06, 2022 12:07 PM GMT
Report

2022 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

உலகிலேயே மிக உயரிய விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. அந்த வகையில் இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் அமைதி, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு - தட்டிச் சென்ற பிரான்ஸ் எழுத்தாளர்! | Nobel Prize In Literature Awarded To French Author

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது. மரபியல் சார்ந்த ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சுவீடனை சேர்ந்த மரபணு நிபுணர் ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இலக்கியம் 

தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் தகவல் அறிவியலில் பல்வேறு சாதனைகள் படைத்ததற்காக அலெய்ன் அஸ்பெக்ட், ஜான் பிரான்சிஸ் க்ளாஸர், ஆன்டன் ஜெய்லிங்கர் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

அதையடுத்து, வேதியியலுக்கான நோபல் பரிசு, உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோஸி, மார்டன் மெல்டால் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்ணாக்ஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. " 'எல்' ஆக்குபேஷன் ('L ' Occupation ) " என்ற புத்தகத்தை எழுதியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.