கெமிஸ்ட்ரிக்கான நோபல் பரிசு - 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

United States of America Denmark
By Sumathi Oct 05, 2022 12:42 PM GMT
Report

2022ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.

 நோபல் பரிசு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

கெமிஸ்ட்ரிக்கான நோபல் பரிசு - 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு | Nobel Prize Chemistry Awarded To Three Scientists

அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் துறை

மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல் மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி,

டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.