2022 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு - யார் யாருக்கு தெரியுமா?
By Thahir
2022 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு அறிவிப்பு
உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.