8 மணி'ல இருந்து வெயிட் பண்ணேன்...ஆசிரியர்கள் யாருமே பேச வரல..அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

Anbil Mahesh Poyyamozhi
By Karthick Oct 12, 2023 07:05 AM GMT
Report

ஆசிரியர்களுடானான பேச்சுவார்த்தைக்காக இன்று நாள் முழுவதும் காத்திருக்க தயார் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல் போன்ற 30 அம்ச கோரிக்கையை முன்வைத்து டிட்டோ ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் சென்னையில் நாளை அதாவது அக்டொபர் 13-ஆம் தேதி ஆளும் அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டவுள்ளது.

no-teachers-came-to-talk-with-me-anbil-magesh

நேற்று இந்த அமைப்புகளுடன் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் 2 மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறி திட்டமிடப்படி போராட்டம் நடக்கும் என டிட்டோ ஜாக் அமைப்பினர் அறிவித்தனர்.

4 வருஷமா டம்மியாக இருந்தேன் !!அதிமுக நாங்க தான்...ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்!!

4 வருஷமா டம்மியாக இருந்தேன் !!அதிமுக நாங்க தான்...ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்!!


இன்று முழுக்கவும் காத்திருக்க தயார்

இந்நிலையில் தான், இன்று காலை அந்த அமைப்பினரை பேச்சுவார்த்தைக்காக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அழைத்திருந்தார். ஆனால் அவரை சந்திக்க யாரும் முன்வராததாக தெரிகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை 8:30 மணிக்கு அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கியும் யாரும் சந்திக்கவிவில்லை என தெரிவித்தார்.

no-teachers-came-to-talk-with-me-anbil-magesh  

தற்போது மாணவர்களை சந்திக்க ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு இருப்பதாக கூறிய அவர், மீண்டும் நேரம் ஒதுக்கியுள்ளேன் என்றும் இன்று முழுக்க கூட தான் ஆசிரியர்களுக்காக காத்திருக்க தயார் என்று கூறினார். அவர்களிடம் தான் கூறுவது ஒன்று தான் என்று அனைவரும் ஒன்றுகூடி ஒருமித்த கருத்தை , கோரிக்கையை தன்னிடம் கூறுங்கள் என கேட்டுக்கொண்டு, அவர்களிடத்திலேயே ஒற்றுமை இல்லாதது போல தெரிகிறதுஎன கூறினார்.