4 வருஷமா டம்மியாக இருந்தேன் !!அதிமுக நாங்க தான்...ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்!!
பாஜக தேசிய தலைமையுடன் நட்பின் அடிப்படையில் பேசி வருவதாகவும், கூட்டணி குறித்து தற்போது பேச வேண்டிய அவசியமில்லை என அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
டம்மி போஸ்ட்
அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து அண்ணாமலை பேசிய நிலையில், அதிமுக தனது கூட்டணியை பாஜகவுடன் முறித்துக் கொண்டது. அப்பொது முதலே, பாஜக கூட்டணியில் தான், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைவார்கள் என பெரிதாக நம்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், துணை முதலமைச்சர் பதவி என்பது டம்மி போஸ்ட் என கூறி, அந்த பதவிக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது என்றார். தான் அந்த பதவியில் தான் இருந்தேன் என குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை என தெரிவித்து இதுவும் அதுபோல தான் என்றார்.
நாங்கள் தான் உண்மையான அதிமுக
தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் தான் உண்மையான அதிமுக என தெரிவித்து இரட்டை இலை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டு, பாஜக தேசிய தலைமையுடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன் என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த ஓபிஎஸ், அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாட்டை நடத்த முடிவெடுத்துள்ளதாக கூறினார்.