வரி கிடையாது; கல்வி, மருத்துவம் இலவசம் - எந்த நாட்டில் தெரியுமா?

Malaysia Indonesia
By Sumathi Mar 20, 2023 06:21 AM GMT
Report

மக்களுக்கு வரி இல்லை, கல்வி மருத்துவம் இலவசமாக ஒரு நாடு வழங்குவதென்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது.

புரூனே

புரூனே 1984 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, சுல்தான் ஹசனல் தன்னை நாட்டின் பிரதமராக அறிவித்துக்கொண்டார். கிழக்கு ஆசிய பகுதியில் மலேசிய மற்றும் இந்தோனேசியா தீவுகளை தனது எல்லைப்புறமாக கொண்டு 5,765 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புரூனே நாடு அமைந்துள்ளது.

வரி கிடையாது; கல்வி, மருத்துவம் இலவசம் - எந்த நாட்டில் தெரியுமா? | No Tax And Education Health Care Is Free Country

2021 ஆண்டு கணக்கெடுப்பு படி சுமார் 4.45 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் அதன் குடிமக்கள் மீது எந்த கடனும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம். அரசின் பேரில் மட்டும் தான் கடன் உள்ளது. அதன் தேவைகளை எல்லாம் பார்த்துக்கொள்ள தேவையான பணம் அதனிடம் உள்ளது.

பொருளாதாரம் 

கடல்புற எல்லையில் உள்ள இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, 90 சதவிகிதமாக உள்ளதால் அதனை ஏற்றுமதி செய்கிறது. இதில் கிடைக்கும் லாபத்தை வைத்து உள்நாட்டு தேவைகள் பூர்த்து செய்யப்படுகிறது. மேலும், இங்கு கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம்தான்.

வரி கிடையாது; கல்வி, மருத்துவம் இலவசம் - எந்த நாட்டில் தெரியுமா? | No Tax And Education Health Care Is Free Country

மேலும், எதுவும் இல்லை என்று போய் நிற்பவர்களுக்கு இலவசமாக வீட்டு மனையை வழங்குகிறார்கள். வீடு கட்ட காசில்லை என்றால் வீட்டை கட்டியும் தருகிறார்கள். உலகம் முழுவதும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்ச காலத்திலேயே கச்சா எண்ணெய் சார்ந்த பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு குறையும்.

அப்போது இந்த நாட்டின் பொருளாதாரம் என்பது பெரிய அடியை சந்திக்க நேரலாம். ஒட்டுமொத்தப் பொருளாதாரமும், ஒரே ஒரு பொருளை சார்ந்திருப்பது ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.