நீங்க வந்தா மட்டும் போதும் - 50 லட்சத்துடன் அமைதி வாழ்க்கை தரும் அரசு!
மக்கள் குடியேற 50 லட்சம் தருவதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
வாலெய்ஸ்
உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள், ஆண்டு முழுவதும் ஐரோப்பிய நாட்டில் உள்ள சுவிட்சர்லாந்திற்கு செல்வார்கள். இதில் குறிப்பாக வாலெய்ஸ் என்ற சுற்றுலா செல்லும் வழியில், அல்பினென் கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 4265 அடி உயர்த்தில் அமைந்துள்ளது.
இங்கு அறிய வகை பறவைகள், விலங்குகள் உள்ளன. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு பல விளையாட்டு போட்டிகள் உள்ளன. மேலும், அழகான சுற்றுசூழலில் அமைதியான வாழ்க்கை வாழலாம். ஆனால், இந்த கிராமத்தில் மக்கள் அனைவரும் படிப்படியாக வெளியேறிவருகின்றனர்.
அரசு அதிரடி
'இந்த கிராமத்தில் பிழைப்பதற்கு தேவையான வாழ்வாதாரம் இல்லாததே' அதற்கு காரணமாக கூறுகிறார்கள். கடந்த 2020 டிசம்பர் நிலவரப்படி, 243 பேர் இந்த கிராமத்தில் உள்ளதாக அறிக்கை வெளியானது. தற்போது அது குறைந்து மோசமான நிலையை எட்டி வருகிறது.
இந்நிலையில், சுவிஸ் அரசு இந்த கிராமத்தில் குடியேறுவதற்கு மக்களை ஊக்கப்படுத்த 50 லட்சம் தருவதாகவும் கூடவே சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது. அதில், சுவிஸ் குடியுரிமை வைத்துள்ள, 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இங்கு குடியேற விண்ணப்பிக்க முடியும்.
வேறு நாட்டை சேர்ந்தவர் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் சுமார் 10 ஆண்டுகளாக வசித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.