காவி நிறத்தில் மாறும் இந்திய அணியின் ஜெர்சி? ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய அணியின் ஜெர்சி காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவி நிற ஜெர்சி
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக ட்ரீம் லெவன் நிறுவனம் இருந்து வந்தது. தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும்
ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதனால் ட்ரீம் லெவன் உடனான உறவை முறித்துக் கொள்வதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா அறிவித்துள்ளார். எனவே, ஆசியக் கோப்பை தொடரில் புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
பிசிசிஐ விளக்கம்
இந்நிலையில், நீல நிற ஜெர்சி அல்லாமல் காவி நிறத்தில் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவி நிறத்தில் ஜெர்சி ஒன்று வடிவமைக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விசாரணையில் அது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போலியான ஜெர்சி என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆசியக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.