மீண்டும் ஆர்சிபிக்கு திரும்பும் ஏ.பி. டிவில்லியர்ஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
ஏ.பி. டிவில்லியர்ஸ் மீண்டும் ஆர்.சி.பி. அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆர்.சி.பி. அணி
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.
மூன்று சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 2011 முதல் ஆர்.சி.பி அணியில் இடம் பெற்று வந்தார். தொடர்ந்து 2021 இல் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
மீண்டும் ஏ.பி. டி
இருப்பினும் ஆர்.சி.பி அணி உடனான அவரது உறவை தொடர்ந்து வருகிறார். அந்த அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி.டிவில்லியர்ஸ் 4522 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏ.பி.டிவில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ஆர்.சி.பி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.