எந்த எதிர்பார்ப்பும் இன்றி வேலை செய்தேன் - பதவி தர மறுத்தார்கள் - விஜயதரணி வேதனை
பாஜகவிற்கு மாறியுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பதவி தர மறுக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
நிறைய பிரச்சனைகள்
பாஜகவில் இணைந்த பிறகு, நேற்று இரவு கோவை வந்தடைந்தார் விஜயதரணி.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பாஜகவில் நட்டா தலைமையில் பிரதமர் மோடி வழிகாட்டுதல்படி இணைத்து கொண்டதாக தெரிவித்து, பல ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன் என்றும் ஆனால் அங்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன என குறிப்பிட்டார்.
பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது என குற்றம்சாட்டிய விஜயதரணி, என்னை தவிர வேறு எந்த பெண்ணும் சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியவில்லை என்று சுட்டிக்காட்டி, தன்னை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு உள்ளது என வேதனை தெரிவித்தார்.
7 ஆண்டுகள்...
37 ஆண்டுகள் எந்த கட்சிக்கும் செல்லாமல் காங்கிரஸ் கட்சியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை பார்த்ததாகவும், ஆனால் தலைமை பதவி என வந்தால் பெண்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தவறானது என்று குறிப்பிட்டு,
ஏன் பெண்களால் எதுவும் செய்ய முடியாதா? நிச்சயமாக முடியும் என உறுதிபட தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளாகவே தனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது என்றும் பாஜகவை பொருத்தவரை எவ்வளவு பெண் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்றார்.