பேருந்து இயக்கத்தில் பிரச்சனை இல்லையே..! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சரியாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, பயணிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிளாம்பாக்கம்
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதல் சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, பயணிகள் நேற்று இரவு ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வினை மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நள்ளிரவு நேரத்தில்தான் எழுந்துள்ளது என்று கூறி, காலை, மாலை போன்ற நேரத்தில் பிரச்சனை இல்லை என்றும் கூறினார்.
மேலும், நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு 133 பேருந்துகள் சென்றன என சுட்டிக்காட்டிய அவர், அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகள் அனுப்பப்பட்டன என்றும்,
அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.