சரியா தண்ணிக்கூட இல்ல..! இதற்குதான் வாக்களித்தோமா? அமைச்சரை கேள்விகளால் துளைத்த பொதுமக்கள்!!
பெரம்பலூர் சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூரில் எஸ்.எஸ்.சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்ட வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய வெண்மணி கிராமத்தில் தொழிற்பயிற்சி கல்லூரிக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை, மகளிர் விடுதி என 10 கோடியே 87 லட்சம் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்றிருந்தார்.
அப்பகுதியை சுற்றிய குறிப்பிட்ட கிராமங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மயான பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அதே போல தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை என குற்றசாட்டுக்கள் உள்ளன.
இது தான் ஓட்டு போட்டோமா..?
இந்நிலையில், தான் தங்கள் பகுதிக்கு வந்த அமைச்சர் சிவசங்கரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இதற்காக தான் ஓட்டு போட்டோமா? என அவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் அவர்களிடத்தில் முறையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.