தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகவிழா.. அனுமதி மறுத்த காவல்துறை?இதுதான் காரணமா!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Aug 20, 2024 12:11 PM GMT
Report

  தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகவிழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொடி அறிமுகவிழா 

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகவிழா.. அனுமதி மறுத்த காவல்துறை?இதுதான் காரணமா! | No Police Permission Tvk Flag Unveiling Sources

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகவிழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் , நடிகருமான விஜய் கொடி ஏற்றையுள்ளார்.  

தவெக தலைவர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்!

தவெக தலைவர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்!

 அனுமதி மறுப்பு  

இதனைத் தொடர்ந்து ஆதித்தியராம் சிட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டத்தில் நடிகர் விஜய் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனுமதி கடிதம் தரப்பட்டு இருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகவிழா.. அனுமதி மறுத்த காவல்துறை?இதுதான் காரணமா! | No Police Permission Tvk Flag Unveiling Sources

இந்த நிலையில் நடிகர் விஜயின் பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை தரப்பிலிருந்து அனுமதி மறுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதித்தியராம் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின் போது போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது .

இதனைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுத்து உள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.