அரசியலில் இருந்து விலக முடியாது - மகிந்த ராஜபக்சே அதிரடி

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis
By Sumathi Aug 22, 2022 11:40 AM GMT
Report

இலங்கை அரசியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை என இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கை மக்கள் சிலர் பொருளாதார நெருக்கடி தாங்கமுடியாமல் தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அரசியலில் இருந்து விலக முடியாது - மகிந்த ராஜபக்சே அதிரடி | No Plans To Retire Mahinda Rajapakse Announces

அரசியல்வாதிகளுக்கு எதிராக பொதுமக்கள் குரலெழுப்பி வருவதால் அங்கு அரசியலில் குழப்பமும் இருந்து வருகிரது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே சொந்த நாட்டை விட்டு ஓடி தாய்லாந்து நாட்டிற்கு அடைக்கலம் புகுந்துள்ளார்.

மகிந்த ராஜபக்சே

இந்த சூழ்நிலையில் மகிந்த ராஜபக்சே அளித்த பேட்டி ஒன்றில், தனது அண்ணனும், முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தபய ராஜபச்சே தன்னிடம் ஆலோசிக்காமல் இலங்கையை விட்டு சென்று விட்டார்.

அரசியலில் இருந்து விலக முடியாது - மகிந்த ராஜபக்சே அதிரடி | No Plans To Retire Mahinda Rajapakse Announces

கோத்தபய ராஜபச்சே இலங்கையை விட்டு சென்றிருக்க கூடாது என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவராகவே முடிவுகளை எடுத்து விட்டார். என்னிடம் வந்து நான் இலங்கையில் இருந்து தப்பி செல்ல போகிறேன் என்று கூறினார்.

நிச்சயம் தடுத்திருப்பேன்

அதற்கு நான் எந்த பதிலும் அளிக்கவில்லை. என்னிடம் இலங்கையை விட்டு சென்று விடலாமா என்று ஆலோசனை கேட்டு இருந்தால் நான் நிச்சயமாக வேண்டாம் என்று தடுத்திருப்பேன். கோத்தபய ராஜபச்சே அவர் நம்பிய வல்லுனர்களின் ஆலோசனையை கேட்டிருக்கிறார்.

குறிப்பாக மத்திய வங்கியின் ஆளுநர்களாக இருந்தவர்களின் பேச்சை கேட்டு செயல்பட்டிருந்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன்.

 ஓய்வு இல்லை

நேரம் வரும் போது மட்டுமே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் அரசியலில் இருப்பேன். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாதபட்சத்தில் நான் ஒரு வக்கீல் என்னால் கோர்ட்டில் வாதாட முடியும். தேவைப்பட்டால் நான் கோர்ட்டுக்கு செல்லவும் தயார் என தெரிவித்துள்ளார்.