நாட்டை விட்டு வெளியேறக்கூடாது - மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சேவிற்கு இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி
இலங்கை பொருளாதாரம்
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்
கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை ஆவேசமாக உள்ளே புகுந்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார்.
தஞ்சம் அடைந்த கோத்த பய ராஜபக்சே
தஞ்சம் அடைந்த கோத்தபய நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பியதால், இன்று சிங்கப்பூர் செல்வதாக தகவல் வெளியானது. மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார்.
மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்வதாக தகவல் வெளியானது.
பதவி விலகிய கோத்த பய
இவ்வாறு நெருக்கடி முற்றியதை தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று விலகினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோத்தபய ராஜினாமா செய்த தகவலை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தும் உறுதி செய்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் தொடர்பாக குழப்பம் நிலவி வந்த நிலையில் சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இலங்கையில் 8-வது அதிபதி கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா கூறியுள்ளார்.இலங்கை மக்களின் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.
இலங்கையை விட்டு வெளியேற தடை
இந்நிலையில், மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் ஜூலை 28ம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது இலங்கை உச்சநீதிமன்றம். மேலும், நாட்டை விட்டு இருவரும் தப்ப வாய்ப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறாக இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.