இந்த நட்சத்திர வீரர்களுக்கு இனி இந்திய அணியில் இடமில்லை - கழட்டிவிட்ட பிசிசிஐ!
ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 போட்டிகளுக்கு இனி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கிறது.
டி20 போட்டி
இந்தியாவின் டி20 ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியா ஒரு முக்கியமான வீரராக இருப்பார் எனவும், நீண்ட கால கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் மற்றும் விராட் இருவரும் இலங்கைக்கு எதிரான டி20 அணியில் இடம் பெறவில்லை.
இருவரும் T20 உலகக் கோப்பைகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளனர், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. டி20களில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில், விராட் 115 போட்டிகளில் 52.73 சராசரியுடன் 4008 ரன்களுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
வாய்ப்பில்லை..
ரோஹித் 148 போட்டிகளில் 31.32 சராசரியுடன் 3853 ரன்களுடன் அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் ”நான் இன்னும் டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு பெறவில்லை. எங்களிடம் ஆறு டி20 போட்டிகள் மட்டுமே உள்ளன, மூன்று முடிந்துவிட்டன. எனவே நாங்கள் சமாளிப்போம், ஐபிஎல் வரை இளம் வீரர்கள் கவனித்துக் கொள்வது உங்களுக்குத் தெரியும்.
ஐபிஎல்லுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் நிச்சயமாக, நான் டி20ஐ கைவிட முடிவு செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சில மூத்த வீரர்களின் பணிச்சுமை காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் புதிய தோற்றம் கொண்ட அணி விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.