சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் ஓய்வு - அதிர்ச்சியில் தோனி

MS Dhoni Chennai Super Kings IPL 2023
By Thahir Jan 10, 2023 02:51 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து உருக்கம் 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவு ஒன்றை எடுத்தேன். அது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

Key player retired from Chennai Super Kings team

எனது வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட வேண்டும் என குறிக்கோளுடன் இருந்தேன். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கடவுள் எனக்கு திறமையையும் வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் கொடுத்தார்.

மீதமுள்ளவை அவரது கைகளில் இருந்தன என்றார். இனி டி20 மற்றும் பிற குறுகிய வடிவத்திலான கிரிக்கெட்டில் எனது கவனத்தை திருப்ப உள்ளேன்.

இதைச் செய்வதன் மூலம், எனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நான் சிறந்த சமநிலையைப் பெற முடியும். எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

அதிர்ச்சியில் எம்எஸ் தோனி 

முன்னாள் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸூக்கு எனது நன்றி. முதல் முறையாக சர்வதேச அணியில் இருந்து என்னை விடுவித்த பிறகு மீண்டுன் என்னை அணிக்குள் வந்தவர் மற்றும் என்னை ஆதரித்து சிறந்த வீரராக மாற்ற உதவியர் அதனால் நான் அவருக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன் என்றார்.

Key player retired from Chennai Super Kings team

ஓய்வு பெறுவதாக டுவைன் பிரிட்டோரியஸ் அறிவித்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதை தொடர்ந்து எம்.எஸ் தோனியும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.