இனி வீட்டு வாசலில் வாகனம் நிறுத்தினால் அவ்வளவுதான்..நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி!

Tamil nadu Chennai Madras High Court
By Swetha Aug 21, 2024 07:14 AM GMT
Report

வீட்டு வாசலில் வாகனங்களை நிறுத்தினால் என்ன நடவடிக்கை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாகனம் நிறுத்தினால்.. 

சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் தனியார் நிறுவன அதிகாரி கிஷார் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருக்கிறார். அதில், "சென்னை அண்ணாநகர், N பிளாக்கில், 25வது தெருவில் நான் வசித்து வருகிறேன்.

இனி வீட்டு வாசலில் வாகனம் நிறுத்தினால் அவ்வளவுதான்..நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி! | No Parking Vehicle In Doorstep Mhc Questions Govt

எங்கள் குடியிருப்பு பகுதியில், தெருவோர உணவு கடைகளை, உரிமம் பெறாமல் நடத்துகிறார்கள்.. தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை அருகில் உள்ள தெருக்களில் நிறுத்துகின்றனர்.இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்ட விரோத செயல்களும் நடக்கின்றன.

பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே, உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளையும், அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்கள் அகற்றப்பட்டு,

விஷச்சாராய இழப்பீடு;10 லட்சம்...இவ்வளவு அதிக தொகை எப்படி வழங்க முடியும்? நீதிமன்றம் கேள்வி!

விஷச்சாராய இழப்பீடு;10 லட்சம்...இவ்வளவு அதிக தொகை எப்படி வழங்க முடியும்? நீதிமன்றம் கேள்வி!

நீதிமன்றம் கேள்வி

அந்தப் பகுதியில், நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார். இதையடுத்து, "குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாசலில், வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

இனி வீட்டு வாசலில் வாகனம் நிறுத்தினால் அவ்வளவுதான்..நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி! | No Parking Vehicle In Doorstep Mhc Questions Govt

என்பதற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தமிழக போக்குவரத்து போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர். அன்மையில், சமீபத்தில், சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

முக்கிய சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சென்னையில் பொதுமக்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அது மட்டுமல்லாமல், தன்னிச்சையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்... கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களும் அகற்றி நடவடிக்கை மேற்கொள்வதோடு, எளிதான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.