அந்த ஆசை இல்லை...நான் இறந்துவிட்டால் இது தான் நடக்கும்- மனம்திறந்த நடிகர் மம்முட்டி!

Mammootty Actors Social Media
By Swetha May 30, 2024 03:51 AM GMT
Report

இறந்தபிறகு அவர்களை நினைவு கூர்வது குறித்து நடிகர் மமுட்டி பேசியது சிந்திக்க வைத்துள்ளது.

நடிகர் மமுட்டி 

மலையால சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக அறியப்படுபவர் மமுட்டி.யதார்த்தமான நடிப்பு, புதுமையான கதாபாத்திரங்கள், அசாத்திய திரைப் படைப்புகள் எனத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கும் மகா கலைஞன் மம்மூட்டி. இவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த ஆசை இல்லை...நான் இறந்துவிட்டால் இது தான் நடக்கும்- மனம்திறந்த நடிகர் மம்முட்டி! | No One Will Remember Me After Death Says Mammootty

அண்மையில், 'காதல் - தி கோர்', 'ப்ரமயுகம்', 'டர்போ' என வெவ்வேறு கதைக்களங்களில், வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துத் தொடர்ந்து வியக்க வைத்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனது இறப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தாரா நடிகர் மம்முட்டி..? - உண்மை இதுதான்!

பிரதமர் மோடியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தாரா நடிகர் மம்முட்டி..? - உண்மை இதுதான்!

 இது தான் நடக்கும்

அதில், “காலத்தால் நீங்கள் எப்படி நினைவுக்கூரப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் அளித்த மமுட்டி “இந்த உலகம் எத்தனையோ மகத்தான மனிதர்களை பார்த்திருக்கிறது. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இன்றும் மக்களால் நினைவுக்கூரப்படுகின்றனர்.

அந்த ஆசை இல்லை...நான் இறந்துவிட்டால் இது தான் நடக்கும்- மனம்திறந்த நடிகர் மம்முட்டி! | No One Will Remember Me After Death Says Mammootty

இந்த உலகம் என்னை எத்தனை காலம் நினைவில் வைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்கள். 10 ஆண்டுகள் அல்லது 50 வருடங்கள் என்னை நினைவில் வைத்துக் கொள்ளுமா? ஆயிரக்கணக்கான நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னை எப்படி இந்த உலகம் நினைவில் வைத்துக் கொள்ளும்?

உலகத்தை விட்டு சென்ற சில ஆண்டுகள் மட்டுமே நினைவுக் கூறப்படுவார்கள். அதன்பின்னர் காலத்தால் எல்லாரும் மறக்கடிக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த உலகம் என்னை காலத்திற்கும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.