திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த மம்மூட்டி - கொண்டாடும் ரசிகர்கள்

Mammootty 50yearsofmammoottysm MammoottysmTrendOnAug6
By Petchi Avudaiappan Aug 06, 2021 04:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் மம்முட்டி திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த மம்மூட்டி - கொண்டாடும் ரசிகர்கள் | Mammootty Completes 50 Years In Cinema

மலையாள சினிமாவின் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியான அனுபவங்கள் பாலிச்சக்கல் என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் குடும்ப எதிர்ப்பு காரணமாக படிப்பு, திருமணம், வழக்கறிஞர் பணி என வாழ்க்கையில் பயணித்து கொண்டிருந்த மம்மூட்டி 1980 ஆம் ஆண்டு முழு நேர நடிப்புக்கு திரும்பினார்.

இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், 3 முறை தேசிய விருது, 7 முறை மாநில அரசு விருதுகள், ஏராளமான பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ, இரண்டு கவுரவ டாக்டர் பட்டங்கள் என ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

ஒரு வடக்கன் வீரகதா, பழசி ராஜா ஆகிய வரலாற்று படங்கள் மம்மூட்டியின் திரையுலக பயணத்தில் முக்கியமான படங்கள் ஆகும்.மிக உயரியதாக ஜாபர் படேல் இயக்கிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறும் ஆங்கில மொழி திரைப்படத்தில் அம்பேத்கராக நடித்து மம்மூட்டி அசத்தினார்.

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த மம்மூட்டி - கொண்டாடும் ரசிகர்கள் | Mammootty Completes 50 Years In Cinema

கிட்டத்தட்ட சினிமாவில் ஐந்து தலைமுறைகளை கடந்துவிட்ட மம்மூட்டி இன்றும் இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். இவரது மகன் துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழில் வளர்ந்து வரும் ஹீரோவாக திகழ்கிறார்.

தமிழில் மௌனம் சம்மதம் படத்தில் அறிமுகமான மம்மூட்டி தளபதி, அழகன், மறுமலர்ச்சி, ஆனந்தம் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த படங்களிலும் நடித்துள்ளார்.

மம்மூக்கா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மம்மூட்டிக்கு மோகன்லால் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.