பைடன் – கமலாவை கொலை செய்ய.. எலான் மஸ்க் ட்வீட் -கோபத்தில் கொந்தளித்த மக்கள்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 2-வது முறையாகத் துப்பாக்கிச் சூடு முயற்சி குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கிச் சூடு
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
இதற்காக இருகட்சியைச் சேர்ந்தவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் அவரது வலதுக்காதில் மட்டும் காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் டிரம்ப் மீது யாரோ துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலில் அவருக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை.இதனால் அவருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மஸ்க் சர்ச்சை ட்வீட்
இந்த நிலையில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, எக்ஸ் தள பயனர் ஒருவர் “டொனால்ட் டிரம்பை ஏன் கொள்ள முயற்சி செய்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இதனை டேக் செய்த எலான் மஸ்க் ஒரு பதிவு பதிவிட்டிருந்தார்.தற்பொழுது அந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது, “கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆகிய இருவரையும் படுகொலை செய்ய யாரும் முயற்சி கூடச் செய்யவில்லை” என பதிவிட்டிருந்தார்.
அமெரிக்கத் தேர்தலில் குடியரசு வேட்பாளராகப் போட்டியிடும் ட்ரம்ப்பிற்கு எலான் மஸ்க் ஆதரவாக இருப்பேன் என்று கூறிய நிலையில் ,இந்த கருத்து மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.