கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு..பழனிசாமியை விசாரிக்க அவசியமில்லை - தமிழக அரசு பதில்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
கோடநாடு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஏப்ரல் 23, 2017 அன்று கொள்ளை முயற்சி நடந்தது. இந்தச் சம்பவத்தில் எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.மேலும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் உறவினர்கள் இளவரசி, சுதாகரன், உள்ளிட்ட 8 பேரிடம் விசாரிக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த வழக்கில் தற்போது புலன் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
விசாரணை
அதன் பிறகு அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும் என்று அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர்.தொடர்ந்து எதிரி தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும் போது, தேவைப்பாட்டால் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைக்கு அவர்களை விசாரிக்க அவசியமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது உத்தரவிட்டது.