இனி இந்த நாடு செல்ல இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லை.. ஆனா ஒரு கண்டிஷன்!
இந்த நாட்டிற்கு செல்ல விசாவே தேவையில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
விசா இல்லை
கொரோனா தோற்று பரவி வந்த காரணத்தால் சுற்றுலா துறையை நம்பி இருந்த நாடுகள் பொருளாதார குறைவை சந்தித்துள்ளனர். இதனை மேம்படுத்த பல நாடுகள் வெளிநாட்டுப் பயணிகள் ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
முன்னதாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி மலேசியர்கள் தங்கள் நாட்டில் 15 நாள் வரை விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம் என்று சீனா அறிவித்திருந்தது. தற்பொழுது மலேசியா நாடு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண்டிஷன்
இந்நிலையில், மலேசியாவில் தங்க இந்தியர்களுக்கு 30 நாட்கள் வரை விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்குச் சென்று வரலாம். இந்தியர்கள் மற்றும் சீன நாட்டினருக்கு இந்த விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலேசியாவுக்கு நீங்கள் செல்லும் போது, 30 நாட்களுக்குள் குறைவாக அங்கே தங்குவதாக இருந்தால் அதற்காகத் தனியாக விசா பெறத் தேவையில்லை.
ஏற்கனவே இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மலேசியாவும் விசா தேவையில்லை என்ற அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.