12.5 கோடி ஆண்டுகள் பழமை.. புதிய டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு!
புதிய வகை டைனோசர் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர்
நம் உலகில் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் அதன் கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இதில் தற்பொழுது வரை டைனோசரின் பல இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த சமயத்தில், பிரேசிலில் கால்தடங்கள் மூலம் புதிய டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய வகை
இந்நிலையில், பிரேசிலின் அரராகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கால் தடங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய டைனோசர் புதிய டைனோசர் இனம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இது 60 முதல் 90 செ.மீ. அதாவது, 2 முதல் 3 அடி உயரம் கொண்ட ஒரு சிறிய மாமிச விலங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பர்லோவிச்னஸ் ரேபிடஸ் ஒரு சிறிய, வேகமான மாமிச உண்ணி ஆகும். இது சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.