பழங்காலத்தில் வாழ்ந்த பறக்கும் டைனோசர்.. புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு - ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
பறவை போல் இருக்கும் டைனோசர்களின் புதைப்படிவத்தை கண்டுபிடித்துள்ளனர்.
புதைபடிவம்
தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் சுமார் 148 முதல் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, நீண்ட கால்கள் கொண்ட ஃபெசன்ட் (ஒரு வகை கோழி) அளவிலான டைனோசரின் புதைப்படிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது அர்ச்சியாளர்களால் Fuijianvenator prodigiosus என்று பெயரிடப்பட்டுள்ளது, அதாவது லத்தீன் மொழியில் "Fuijian நகரத்து வினோதமான வேட்டைக்காரர்" என்று பொருள். இந்த உயிரினம் ஜுராசிக் காலத்திலிருந்து, இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகால பறவை போன்ற டைனோசர்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள்
இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, "இது உண்மையில் பறவைகளின் குழுவிற்குள் ஒரு வித்தியாசமான விலங்கு" என்று சால்ட் லேக் சிட்டியில் உள்ள யூட்டா பல்கலைக்கழகத்தின் பழங்காலவியல் நிபுணர் மார்க் லோவன் நேச்சரிடம் கூறியுள்ளார்.
பழங்கால ஆராய்ச்சியாளர்கள், "முதல் பறவை இனம் என்பது, ஆர்க்கியோப்டெரிக்ஸ் எனப்படும் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான இறகுகள் கொண்ட டைனோசர்" என்று கருதுகின்றனர்.
மேலும் இந்த புதைபடிமத்தின் எடை சுமார் 1.4 பவுண்டுகள் (641 கிராம்) எடை கொண்டுள்ளதாலும், டைனோசர் போன்ற தோற்றம் கொண்டதால் இது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.