ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு இதுதான் - எப்படி தெரியுமா?
வாட்டிகன் சிட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என அறியப்படுகிறது.
வாட்டிகன்
உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியா. இவர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சவுதி அரேபியா முதல் ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் தாம் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், உலகிலேயே மிகச் சிறிய நாடு வாடிகன் சிட்டி. இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது.
முஸ்லீம் இல்லை
இது உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாக உள்ளது. இங்கு தான் போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்கிறார். இங்கு தான் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என அறியப்படுகிறது.
சொந்த ராணுவமும் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்தை பாதுகாக்க விஸ் மிஷனரிகள் நியமிக்கப்பட்டனர். 2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453. வெளிநாட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 372.