போப் இறுதி சடங்கை நடத்திய போப் : வாடிகனில் நடந்த வரலாற்று நிகழ்வு

Vatican
By Irumporai Jan 06, 2023 04:07 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

முன்னாள் போப் ஆண்டவரான 16ம் பெனடிக்டின் இறுதி சடங்கை நடப்பு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடத்தியுள்:ளார்.

போப் மரணம் 

உலகம் முழுக்க உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் மதத்தலைவராக வாட்டிகனில் போப் ஆண்டவர் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு போப் இறந்த பின்னரும் அடுத்த போப் ஆண்டவரை கார்டினல்கள் சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள்.

முன்னதாக போப் இரண்டாம் ஜான் பால் இறந்த பின் போப்பாக பதவியேற்றவர் 16ம் பெனடிக்ட். ஆனால் 8 வருடங்களுக்கு பின் இவர் உடல்நலம் காரணமாக போப் பதவியிலிருந்து விலகிய நிலையில் போப் பிரான்சிஸ் தற்போதைய போப்பாக இருந்து வருகின்றார்,

போப் இறுதி சடங்கை நடத்திய போப் : வாடிகனில் நடந்த வரலாற்று நிகழ்வு | Benedict Xvi Funeral In Vatican

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31, 2022ல் 16ம் பெனடிக்ட் வயது மூப்பால் காலமானார். அவரது உடல் கடந்த 2ம் தேதி முதல் வாடிகன் செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

வரலாற்றில் முதன் முறை

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கார்டினல்கள் உட்பட 60 ஆயிரம் பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தற்போதைய போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியில் வந்து 16ம் பெனடிக்ட் அடக்கத்திற்கு இறுதி சடங்குகளை நடத்தினார். 

முன்னால் போப் ஒருவருக்கு நடப்பு போப் இறுதி சடங்குகள் செய்வது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகின்றது.