ஒரு கொசு கூட இல்லாத ஒரே நாடு - எது தெரியுமா?
உலகிலேயே ஒரு கொசு கூட இல்லாத நாடு குறித்த தகவல்களை பார்ப்போம்.
கொசுவே கிடையாது
கொசு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கொசு ஒருவரை கடித்தால், அவருக்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. அவற்றில் சில ஆபத்தானவை.
ஆனால் கொசுவே இல்லாத ஒரு நாடு என்றால் அது ஐஸ்லாந்து. அதற்கு அந்த நாட்டின் வானிலையே காரணம். காலநிலை மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் அங்கு கொசுக்கள் உயிர்வாழ வாய்ப்பில்லை.
என்ன காரணம்
அங்கு குளிர்காலம் முடிந்தவுடன், மீண்டும் 40 நாட்களுக்குள் குளிர்காலம் தொடங்குமாம். இதன் விளைவாக, உருகும் பனி நீராக மாறும். அது மீண்டும் பனியாக மாறுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானிகள், ஐஸ்லாந்தின் நீர்நிலைகளில் உள்ள ரசாயனங்களின் விகிதம் கொசு இனப்பெருக்கத்திற்கு ஏற்றது அல்ல. கடுமையான குளிர்காலத்தாலும், ஆறுகள் ஓடாததாலும் கொசுக்கள் உற்பத்தியாகாது என தெரிவிக்கின்றனர்.
மேலும், கடுமையான குளிர்காலத்தில் கொசுக்கள் உயிர்வாழ்வது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.