29 வயது ஆன நிலையிலும் திருமணம் ஆகாததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
துாத்துக்குடி அருகே திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் எடுத்த விபரீத முடிவு
சாத்தான்குளம் அருகேயுள்ள புளியங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு 5 மகன்கள் உள்ள நிலையில்,இவர்களில் 4 பேருக்கு திருமணமானது. மற்றொரு மகனான சிவகுமார் (29) வீட்டில் இருந்துள்ளார்.
தற்போது திருமண வயது வந்துவிட்டதால் சிவகுமாருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். ஆனால், அவருக்கு சற்று மனவளர்ச்சி குறைபாடு உண்டு என கூறப்படுவதால், அதன்காரணமாக திருமண வரன் அமையவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தியடைந்த சிவகுமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறிஅழுதனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர்.
இதுகுறித்து அவரது சகோதரர் தாமோதரன், அளித்த புகாரில் சாத்தான்குளம் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.