இந்த ராசிகாரர்களுக்கு வேலை கிடையாது..நிறுவனம் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் - மிரண்ட இளைஞர்கள்!
நிறுவனம் ஒன்று சில ராசிகாரர்களுக்கு வேலை கிடையாது என சொன்னது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலை கிடையாது..
சீனாவில் பிரபல நிறுவனம் ஒன்று மூட நம்பிக்கைகளின் அடுத்த கட்டத்திற்கே சென்றுள்ளது. அதாவது குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பிக்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே சீனா மூடநம்பிக்கைகளில் அதிகம் பின்பற்றுபவராக உள்ளனர். அங்குள்ள பல பெருநிறுவன உலகளவில் விரிவடைந்து இருந்தாலும் சில குறிப்பிட்ட தேதிகள் அல்லது குறிப்பிட்ட நிறங்களைத் தவிர்ப்பது போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றும்.
அந்த வகையில், தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சன்க்ஸிங் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் என்ற நிறுவனம் தான் இந்த வினோதமான கண்டிஷனை போட்டுள்ளனர். அவர்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதற்காக வெளியிட்ட கொள்கையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
அதில், சீன ஆண்டான நாய் ஆண்டில் பிறந்த யாரும் தங்கள் நிறுவனத்தில் வேலை கோரி விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், சீனாவில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு விலங்கின் பெயரைக் குறிப்பிட்டே அழைப்பார்கள்.
நிறுவனம் கண்டிஷன்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சுழற்சி இருக்கும். அதன்படி நாய்கள் ஆண்டு என்பது 1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018 ஆண்டுகளைக் குறிக்கும். இந்த ஆண்டுகளில் பிறந்தோர் விண்ணப்பிக்கக்கூடாது என அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருப்பவர் டிராகன் ராசியைக் கொண்டவராம்.. அவருக்கும் நாய் ராசி கொண்டவர்களுக்கும் ஆகாதாம். நாய் ராசி நிறுவனத்திற்கு துருதிஷ்டத்தை கொண்டு வருவார்கள் என்று சொல்லியே தடை விதித்துள்ளனர்.
இருப்பினும், தங்கள் முடிவை நியாயப்படுத்தும் அந்த நிறுவன ஊழியர்கள், "ஒவ்வொரு ராசியும் உலோகம், மரம், நீர், நெருப்பு மற்றும் பூமி ஆகிய 5 கட்டங்களில் ஒன்றில் வரும். இதில் டிராகன் தண்ணீர் பிரிவில் வரும். அதேநேரம் நாய் ராசி நெருப்பு பிரிவில் வரும்.
எனவே, இரு தரப்பும் இணைந்து எதையுமே செய்ய முடியாது. இதன் காரணமாகவே நாங்கள் இந்த பாலிசியை வைத்துள்ளோம். நாய் ராசியாக இல்லை என்றால் போதும்.. தகுதியில் கூட சமரசம் செய்து கொள்வோம்" என்கிறார்கள்.