ராமர் இருந்ததற்கு வரலாறும் இல்லை..ஆதாரமும் இல்லை - அமைச்சர் சிவசங்கர் பேச்சு!

Tamil nadu S. S. Sivasankar Ariyalur
By Swetha Aug 02, 2024 10:00 AM GMT
Report

ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

ராமர் ஆதாரம்

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை அரசு விழாவில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.

ராமர் இருந்ததற்கு வரலாறும் இல்லை..ஆதாரமும் இல்லை - அமைச்சர் சிவசங்கர் பேச்சு! | No History Or Evidence Of Ramar Says Sivasankar

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவசங்கர், ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.

அவங்க தான் தவிக்குறாங்க...தொழிலாளர்கள் பணிக்கு வந்தாச்சு - அமைச்சர் சிவசங்கர்

அவங்க தான் தவிக்குறாங்க...தொழிலாளர்கள் பணிக்கு வந்தாச்சு - அமைச்சர் சிவசங்கர்

சிவசங்கர் பேச்சு

ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோவில்கள்,கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள்.

ராமர் இருந்ததற்கு வரலாறும் இல்லை..ஆதாரமும் இல்லை - அமைச்சர் சிவசங்கர் பேச்சு! | No History Or Evidence Of Ramar Says Sivasankar

ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால், ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது. ராமரை பற்றி பேசுபவர்களே அவதாரம் என்றுதான் குறிப்பிடுவார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது.

கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. நம்மை மயக்கி, நம்முடைய வரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்காகதான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.