100 வருடங்களாக குழந்தைகளே பிறக்காத நாடு..? பெற்றோர்கள் ஆவதற்கு தடை..? அதிர்ச்சி பின்னணி
பெற்றோர்கள் ஆவதற்கு நாடு ஒன்று தடை விதித்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா..?
பெற்றோராவதற்கு தடை
குழந்தைகளே பெற்று கொள்ளாத நாட்டை குறித்து நீங்கள் கேட்டதுண்டா..? ஆம், குழந்தையே வேண்டாம் என்று மக்கள் இருப்பதில்லை, குழந்தை பெற்றுக்கொள்ள இந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது இன்று நேற்று துவங்கியது அல்ல. கிட்டத்தட்ட சுமார் 95 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. அதுவும் நாடு மிகவும் சிறிய நாடு என்பது தான் இதில் வினோதம். வாடிகன் நாட்டை நம்மில் பலரும் அறிந்திருப்போம்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வேர்கள் இந்த நாட்டில் இருந்து தான் துவங்குகிறது. இத்தாலி நாட்டிற்குள் அமைந்துள்ள இந்த நாட்டிற்கு, யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒருவர் கற்பமானாலோ அவர் ரோம் நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.
நாட்டை விட்டு...
காரணம், இந்த வாடிகனில் மருத்துவமனைகளே கிடையாது. வாடிகன் நகரத்தின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே. இந்நாட்டின் விதிகளின்படி, கர்ப்பமுற்று பிரசவ நேரம் நெருங்கும் போது, குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அப்பெண் நாட்டை விட்டு செல்ல வேண்டும்.
அதற்கு ஒரு சட்டக்காரணமும் உள்ளது. அதாவது வாடிகன் நாட்டில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதில்லை. தற்காலிக குடியுரிமை மட்டுமே வழங்கப்படுவதால், குழந்தைகள் பிறந்தால் நாட்டின் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதற்காக இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது. வாடிகனில் 800-900 பேர் மட்டுமே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது