யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?
26 வருடங்களாக பணிபுரியும் அலுவலகத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே ஊழியர் ஒருவர் விடுப்பு எடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
விடுப்பு
வேலைக்கு செல்லும் பலரும் வர விடுமுறையை பெரிதாக எதிர்நோக்கி காத்திருப்பார்கள். எப்போடா saturday, sunday வரும் எப்போ நிம்மதியா இருக்கலாம் என waiting'ல தான் முழு வாரமும் வேலை செய்வார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், கடந்த 26 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்து பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளார் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர்.
யார் இவர்?
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேஜ்பால் சிங் தனியார் நிறுவனத்தில் Clerk'காக பணியாற்றி வருகின்றார். 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக 'India Book of Records’ சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றுள்ளார்.
இவர் விடுமுறை எடுக்காதது மட்டுமன்றி ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் பணியில் இருந்துள்ளார். இப்படி ஓயாது பணியற்றி இவர், ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்தது ஏன் என்று தெரியுமா..?
கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், 2003 -ம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துள்ளார்.
மற்றபடி வருடத்திற்கு நிறுவனமே அளிக்கும் 45 நாள் விடுமுறையின் போது இவர், பணிக்கு வந்துள்ளார் என்பது மட்டுமின்றி, இது வரை ஒரு நாள் கூட இவர் தாமதமாக வேலைக்கு வந்ததில்லையாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
