தள்ளிபோகுதா 10 & 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்..? அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Karthick Dec 20, 2023 07:12 AM GMT
Report

வரும் மார்ச் 1-ஆம் தேதி 12-ஆம் வகுப்பிற்கும், 10-ஆம் வகுப்பிற்கு மார்ச் 26-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்வுகள்

10, 11, 12 -ஆம் வகுப்புகளுக்கான இருந்து தேர்வுகள் நெருங்கி வருகின்றது. அரையாண்டு தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்விற்கும் மும்முரமாக தயாராகி வருகின்றனர்.

no-change-in-10th12th-public-exam-minister-clarify

12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ஆம் தேதி துவங்கி 22-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 11-ஆம் வகுப்பிற்கு மார்ச் 4-ம் தேதி துவங்கி மார்ச் 25ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்பிற்கு மார்ச் 26 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டது.

தள்ளிப்போகிறதா பொதுத்தேர்வு..?

ஆனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்து தற்போது தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன மாணவர்கள் பலரும் தங்களின் புத்தகங்களை இந்த வெள்ள மழையால் இழந்துள்ளதால்,

no-change-in-10th12th-public-exam-minister-clarify

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வு தள்ளிப்போகுமா..? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை.

இனி பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இனி பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்; தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.