இனி பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கனவு ஆசிரியர் விருது என்பது வழங்கப்பட்டு வருகிறது. திமுகவின் நீண்ட கால பொதுச்செயலாளரான மறைந்த அன்பழகன் நினைவாக அவரது பிறந்தநாளில் (டிசம்பர் 19)
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாமக்கல், இளையாம்பாளையத்தில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்த விழா நடைபெற்றது.
அரசு பள்ளி ஆசிரியைகள்
அதில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 379 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார். அதன்பின் பேசிய அவர், பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் தான் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை.
நீங்கள் இல்லை என்றால் சமூகம் சிறந்து விளங்க முடியாது. இப்படி முக்கிய பங்காற்றி வரும் ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. அது நம் பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி, விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.