ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Jiyath Oct 08, 2023 02:29 AM GMT
Report

ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.அன்பில் மகேஷ்

திருச்சியில் நேற்று நடைபெற்ற 'ஆசிரியர்களுடன் அன்பில்" என்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்! | Teachers Demand Is Justified Minister Anbil Mahesh

பின்னர் அவர் மேடையில் பேசியதாவது "தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வந்த வேளையில், ஆசிரியர்கள் போராட்ட நிகழ்வு நடைபெற்றது. இதற்கு விளக்கமளிக்க இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.

பேச்சு

பள்ளிக்கல்வித்துறை அறிவித்த 53 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம். ஆசிரியர்களின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன்.

ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையும் உறவினர் போன்றவர்கள். போராட்டங்களால் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆசிரியர்களுக்கு வேண்டியதை செய்வது தி.மு.க. ஆட்சியில் தான்" என்று அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.