திமுக கூட்டணியில் பிரச்சினை ? மதிமுகவின் எதிர்காலம் .. வைகோ பரபரப்பு பேச்சு!
திமுக-வோடு இணைந்து தான் திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக
சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுகக் கட்சியின் தலைமையகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்களுடன் மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார்.இந்தக் கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர். உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய வைகோ ,''வரும் செப. 15-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது . இதற்காக மாவட்டம் தோறும் நிதி வழங்க வேண்டும் எனத் தலைமையிலிருந்து கேட்கவில்லை.
திமுக
ஆனால் விளம்பரப் பணிகளையும் நிர்வாகிகளை அழைத்து வரும் பணிகளையும் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,'' திமுக-வோடு இணைந்து தான் திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.மதிமுக-வுக்கு வளமான, ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது மேலும் அமெரிக்கா செல்லும் முன் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி வெற்றி பெற முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார்.