பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறேன் - எடப்பாடி பழனிசாமி!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Feb 11, 2024 12:31 PM GMT
Report

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் "மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கமாக தி.மு.க. இருக்கிறது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறேன் - எடப்பாடி பழனிசாமி! | No Alliance With Bjp Says Edappadi Palaniswami

அதிமுக ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள். பாஜகவுடன் அ.தி.மு.க. மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

பாஜகவுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் ஓ.பி.எஸ்; லேகியம் விற்கும் அண்ணாமலை - கலாய்த்த ஜெயக்குமார்!

பாஜகவுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் ஓ.பி.எஸ்; லேகியம் விற்கும் அண்ணாமலை - கலாய்த்த ஜெயக்குமார்!

கூட்டணி இல்லை 

முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறேன் - எடப்பாடி பழனிசாமி! | No Alliance With Bjp Says Edappadi Palaniswami

சரியான நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க தி.மு.க. மறுக்கிறது. வாக்களிக்கும் மக்களை மட்டுமே அ.தி.மு.க. நம்புகிறது" என்று தெரிவித்தார்.