பாஜகவுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் ஓ.பி.எஸ்; லேகியம் விற்கும் அண்ணாமலை - கலாய்த்த ஜெயக்குமார்!

Tamil nadu ADMK K. Annamalai O. Panneerselvam D. Jayakumar
By Jiyath Feb 11, 2024 05:22 AM GMT
Report

எங்களுக்கு தி.மு.க பகையாளி என்றால், பா.ஜ.க-வும் பகையாளி தான் என்று அதிமுக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கலந்தாலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்த்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பின் ஒரு பகுதியாக, தொழில் அமைப்புகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாஜகவுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் ஓ.பி.எஸ்; லேகியம் விற்கும் அண்ணாமலை - கலாய்த்த ஜெயக்குமார்! | Admk Jayakumar Trolls Bjp Annamalai And Ops

அப்போது சேத்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் "பா.ஜ.க-வுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓ.பி.எஸ் செய்து வருகிறார். தேர்தலுக்குப் பிறகு ஓ.பி.எஸ் பா.ஜ.க-வில் இணைந்து விடுவார். பா.ஜ.க-வுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் பெரிய கூட்டணி மகத்தான கூட்டணி அமையும்.

ஜெயக்குமார் பேட்டி 

தமிழகத்தில் பா.ஜ.க இல்லாத கூட்டணிதான் அமையும். பா.ஜ.க தவிர்த்து யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அ.தி.மு.க எதிர்க்கும்.

பாஜகவுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் ஓ.பி.எஸ்; லேகியம் விற்கும் அண்ணாமலை - கலாய்த்த ஜெயக்குமார்! | Admk Jayakumar Trolls Bjp Annamalai And Ops

சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும், அதை அ.தி.மு.க எதிர்க்கும். பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டுள்ள இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அனுமதிக்க முடியாது. அண்ணாமலை பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை நிச்சயம் லேகியம் விற்பவராகத்தான் இருப்பார். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க பகையாளி என்றால், பா.ஜ.க-வும் பகையாளி தான். பா.ஜ.க-வுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.