தூக்கத்துல எழுப்பி கேட்டாலும்...பாஜக கூட கூட்டணி இல்லை தான் கூறுவோம் - ஜெயக்குமார் உறுதி..!

Tamil nadu ADMK BJP D. Jayakumar
By Karthick Jan 29, 2024 09:59 AM GMT
Report

பாஜக என்ற பெட்டியை ரயிலில் இருந்து கழட்டி விட்டது விட்டது தான் என அதிமுகவின் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தலுக்காக பிரச்சார குழு, தொகுதி பங்கிட்டு குழு ஆகிய குழுக்களின் ஆலோசனை நடத்தப்பட்டது.

no-alliance-with-bjp-again-confirms-jayakumar-

இந்த குழுவில் கலந்து கொண்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

கழட்டிவிட்ட ரயில்

அப்போது பேசிய அவர், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதி தான் என தெரிவித்தார்.மேலும், பாஜக என்ற பெட்டியை ரயிலில் இருந்து கழட்டி விட்டது விட்டது தான் என கூறி,

அது ஒரு டம்மி டீம் - எந்த கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டாங்க..! ஓபிஎஸ்

அது ஒரு டம்மி டீம் - எந்த கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டாங்க..! ஓபிஎஸ்

நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்ப பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிப்பதாக விமர்சனம் செய்தார்.

no-alliance-with-bjp-again-confirms-jayakumar-

தமிழக மக்களை ஏமாற்றி மாநிலத்தில் காலூன்றி நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது என உறுதிபட தெரிவித்த ஜெயக்குமார், தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறி, இந்தியா கூட்டணி சிதறுவதை போல, திமுக கூட்டணியும் சிதறும் என தெரிவித்தார்.