பெண்களுக்கு இலவச மது.. 1 வாங்கினால் 1 இலவசம் - அதிரடி தடை விதித்த அரசு!

Puducherry
By Sumathi Jul 03, 2023 05:17 AM GMT
Report

மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை

புதுச்சேரியில் மது விற்பனை என்பது பொதுவாகவே பெரிய அளவில் நடக்கும். ஒரு மதுபாட்டில் வாங்கினால் இன்னொரு மது பாட்டில் இலவசம், ஒரு மது பாட்டில் வாங்கினால் இலவச உணவு, பெண்களுக்கு இலவச மது என்று தங்கள் கடை முன்பு பலவகையான விளம்பர பதாதைகளை வைத்து மது விற்பனை செய்வது அங்கு வழக்கம்.

பெண்களுக்கு இலவச மது.. 1 வாங்கினால் 1 இலவசம் - அதிரடி தடை விதித்த அரசு! | No Advertisements While Selling Alcohol Puducherry

இநிந்லையில், துணை ஆணையர் அலுவலகம்(கலால்) ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், புதுச்சேரி கலால் துறையில் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகளில் உணவகங்களில் அல்லது விடுதிகளில் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அறிவிக்கக்கூடாது.

விளம்பரங்களுக்கு தடை

ஏற்கனவே விளம்பர பதாதைகள், சுவரொட்டிகள் வைத்திருப்பது குறித்து அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது என்றும் ஆணையம் கூறியுள்ளது. எனவே மேற்கூறிய மதுபான விற்பனை உரிமை பெற்றவர்கள் தங்களது மதுபான கடைகள், உணவுகள் விடுதிகள் மற்றும்

பெண்களுக்கு இலவச மது.. 1 வாங்கினால் 1 இலவசம் - அதிரடி தடை விதித்த அரசு! | No Advertisements While Selling Alcohol Puducherry

சமூக வலைதளங்களில் உள்ள விளம்பரங்களை உடனடியாக நீக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது. மேலும், விதிமுறைகள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எச்சரித்துள்ளனர்.