NLC கேண்டீன் உணவில் செத்த எலி - 22 பேருக்கு வாந்தி, மயக்கம்!
தொழிற்சாலை, கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உணவில் எலி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் காலை உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
கேண்டினில் வாங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கேண்டீன் நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் ஏற்கனவே சாப்பிட்டு முடித்த தொழிலாளர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது.
22 பேர் வாந்தி, மயக்கம்
இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நிர்வாகம் இவ்வாறு கடினமாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு தரமான உணவுகள் வழங்குவதில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீடு மற்றும் நிலம் கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என என்எல்சி நிறுவன தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.