அதை செய்து ஓடிவிட்டான்..சிக்னலில் நிவேதா பெத்துராஜிடம் சிறுவன் செய்த செயல் - ஷாக் சம்பவம்!
பிரபல நடிகை நிவேதா பெத்துராஜிடம் சிறுவன் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
நிவேதா பெத்துராஜ்
ஒரு நாள் கூத்து படத்தில் தமிழ் திரையில் அறிமுகமாகினார் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து தமிழில் வேகமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். இதனிடையே கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ்,
அவ்வப்போது அது தொடர்பாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். இந்த நிலையில், அவரிடம் ஒரு 8 வயதுடைய சிறுவன் ஒருவன் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிக்னலில் சிறுவன்
இந்த சம்பவம் குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறுகையில், "சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன்.
இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100யை எடுத்தேன். அப்போது சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். அப்படியே ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100யை மீண்டும் வாங்கினேன்.
அப்போது, அந்த சிறுவன் புத்தகத்தை காருக்குள் வீசிவிட்டு, என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்” என்று தெரிவித்துள்ளார். மேலும்அந்த பதிவில், இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.