அதற்கு அப்புறம் தான் அவ்வளவு கவர்ச்சி; மாறிட்டேன் - உண்மை உடைத்த நிவேதா பெத்துராஜ்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
தான் நடித்த படங்கள் குறித்து நிவேதா பெத்துராஜ் மனம் திறந்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது அதில் ஈடுபடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.
கவர்ச்சி படங்கள்
இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். கார் ரேசிங்கில் பங்கேற்க பல கோடி உதவி செய்ததாகவும், அவருக்கு துபாயில் பல கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவை பரிசாக வாங்கி கொடுத்ததாகவும் பல செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் குடும்பத்திற்காக மிகவும் ஹோம்லியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்தேன். அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியான ரோல் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு நினைத்து ஆல வைகுண்டபுரம்லூ, தம்கி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்தேன்.
உங்களுடைய சவுகரியம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்துவிட்டால் நிச்சயமாக உங்களால் எந்த மாதிரியான ரோலாக இருந்தாலும் நடிக்க முடியும்.
நான் என் பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் தான் நடிப்பேன். என் ரோலும், கவர்ச்சியும் அந்த அளவிற்கு தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.