அவங்க கண்டிப்பா உள்ள வரனும் - பிக்பாஸிடம் அடம்பிடித்த நிவாஷினி - எகிறும் அட்ராசிட்டிஸ்!

Viral Video Bigg Boss
By Sumathi Nov 03, 2022 07:30 PM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் அசல் கோளாறை மீண்டும் கொண்டு வர நிவாஷினி டீல் பேசியுள்ளார்.

அசல் எலிமினேஷன்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் அசல் கோளாரு போட்டியாளர் தொடர்ந்து பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷ வேலைகளை செய்து வந்தார்.

அவங்க கண்டிப்பா உள்ள வரனும் - பிக்பாஸிடம் அடம்பிடித்த நிவாஷினி - எகிறும் அட்ராசிட்டிஸ்! | Nivashini Wants Asal Kolar Back In Biggboss

அவர் குறித்த வீடியோக்கள் தினசரி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களை தொட்டு தடவும் செயல்கள் பார்வையாளர்களை அறுவெறுக்கச் செய்துள்ளது.

நிவாஷினி டீல்

இதனால் ரசிகர்கள் அவர் எலிமினேஷனுக்கு வர காத்திருந்தனர். இதில் அதன் படியே அசல் எலிமினேஷனுக்கு வர், அவருக்கு யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால் கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், போட்டியாளர் நிவாஷினி, பிக்பாஸிடம் டீல் ஒன்றை பேசியுள்ளார். அதில், பிக்பாஸ் நாம ஒரு டீல் பேசலாமா? இந்தவாரம் அசீமை எலிமினேட் செய்துவிட்டு, அசல் கோளாறை மீண்டும் உள்ள கொண்டு வாங்க.

நான் அவங்ககிட்ட பேசல, அவரு புல்லா கேமில் ஃபோகஸ் பண்ணட்டும். ஓகே வா என கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.