நீங்க வந்தா மட்டும் போதும்; எல்லாமே இலவசம் - கைலாசாவிற்கு நித்தி அழைப்பு!

Nithyananda
By Sumathi Jul 20, 2024 10:19 AM GMT
Report

கைலாசா எங்கு உள்ளது என்ற அறிவிப்பை நித்தியானந்தா தெரிவிக்கவுள்ளார்.

நித்தியானந்தா

தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.

நீங்க வந்தா மட்டும் போதும்; எல்லாமே இலவசம் - கைலாசாவிற்கு நித்தி அழைப்பு! | Nityananda Announce About Kailasa Place Details

தொடர்ந்து, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிக்கொள்கிறார். மேலும், தனி கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை வெளியிட்டார். அது மட்டும் இன்றி கைலாசா நாட்டில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருவழியா... கைலாசா எங்கே? புதிதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!

ஒருவழியா... கைலாசா எங்கே? புதிதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!

புது அப்டேட்

இந்நிலையில், வரும் 21 ஆம் தேதி கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஒரு இணையதள லிங்க் மற்றும் வாட்ஸ் அப் எண் ஆகியவற்றையும் பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தங்கள் நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்.

செலவு கிடையாது. மக்களுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது. இந்த சட்டம் மாற்றப்படாது. காவல்துறை, ராணுவம் இல்லாத அகிம்சை தேசசமாக கைலாசா இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள மடங்கள் பற்றி கூறிய நிலையில், மகா கைலாசா என்னும் இடத்தில் இருந்து நாட்டை நிர்வகிப்பதாக அறிவித்துள்ளார்.